இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் நடித்த ‘தக் லைஃப்’ படத்தை இயக்கி இருந்தார். இதில் சிலம்பரசன், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் என பலர் நடித்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து மணிரத்னம் காதல் கதை ஒன்றை இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் அவர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இருவரும் இதற்கு முன் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் இணைந்திருந்தனர். இப்போது இணையும் படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே சிறுத்தை சிவா இயக்கத்திலும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் அப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version