தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா தம்பதி இன்று (பிப்ரவரி 26) ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஆடம்பரமான ‘ITC மெமெண்டோஸ்’ (ITC Mementos) ஓட்டலில் திருமணம் செய்துகொண்டனர். இன்று காலை 10.10 மணியளவில் தெலுங்கு முறைப்படி தாலி கட்டும் சடங்கு நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் தெலுங்கு பாரம்பரிய முறைப்படி காலையில் திருமணம் முடிந்த நிலையில், ராஷ்மிகாவின் குடகு (Kodava) பாரம்பரிய முறைப்படி மாலையிலும் சடங்குகளுடன் இந்தத் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

திருமணத்தில் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என சுமார் 100 பேர் மட்டுமே இந்தத் தனியார் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

உதய்பூரில் நடைபெறும் இந்தத் தனிப்பட்ட திருமணத்தைத் தொடர்ந்து, மார்ச் 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஓட்டலில் திரையுலக நண்பர்களுக்காகப் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version