சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’கூலி’ திரைப்படத்தில் நான் தான் ஹீரோ என நடிகர் நாகர்ஜூனா தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் கூலி. அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தில் நாகர்ஜூனா, அமீர்கான், சத்யராஜ், சபின் ஷாஹிர், பகத் பாசில், சுருதிஹாசன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அத்தோடு படத்தின் டிரைலரும் இணையத்தில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த நிலையில்,
நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நாகர்ஜூனா, “கூலி படத்திற்காக இயக்குனர் லோகேஷ் என்னை அணுகிய போது நீங்க வில்லனாக நடிக்குறீங்களா என்று கேட்டார். இல்லையென்றால் டீ குடிச்சிட்டு சினிமா பத்தி பேசலாம்னு சொன்னார். இப்படத்தில் என் கதாபாத்திரம் (வில்லன்) பெரிதாக பேசப்படும் என நம்புகிறேன். இந்த படத்தில் ஹீரோ நான்தான். லோகேஷ் நெகடிவ் ரோல் கொடுத்தாலும் இது எனக்கு பாசிடிவ் அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.