Close Menu
    What's Hot

    மாஸ் ரெக்கார்டு!. 92 வருசமா தோல்வியே சந்திக்காத பிரேசில்!. 

    ஜூன் 17-இல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

    FIFA ஸ்டேடியத்தில் ரசிகரின் ‘ஸ்மார்ட்’ தில்லுமுல்லு!. போனை மது பாட்டிலாக மாற்றிய வினோதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»வங்கி கடன் முறைகேடு வழக்கு… அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அனில் அம்பானி…
    இந்தியா

    வங்கி கடன் முறைகேடு வழக்கு… அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அனில் அம்பானி…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 5, 2025Updated:August 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வங்கி கடன் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி நேரில் ஆஜராகினார்.

    இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் சகோதரரும், பிரபல தொழிலதிபருமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை யெஸ் வங்கியிடம் வாங்கிய ரூ.3,000கோடி கடனை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பிரதிபலனாக யெஸ் வங்கி அதிகாரிகளுக்கு ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி முதல் டெல்லி அமலாக்கத்துறையினர் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் குழும அலுவலகங்கள், அதிகாரிகள் தொடர்புடைய 35-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். 3 நாட்கள் நீடித்த இந்த சோதனையின் போது முறைகேடு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதேப்போல மேலும் சில வங்கிகள், நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது. இந்த கடன் தொகை போலி நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன. இவ்வாறு ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வங்கி கடன் பணத்தை முறைகேடு செய்தது தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

    அதன்படி, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் அனில் அம்பானி நேரில் ஆஜராகியுள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின்போது வங்கி கடன், நிதி முறைகேடு தொடர்பான அவரின் வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article’கூலி’ படத்தில் நான் தான் ஹீரோ… நாகர்ஜூனா சுவாரஸ்ய தகவல்…
    Next Article இந்தியர் யார் என்பதை நீதிமன்றம் தீர்மானிப்பதில்லை… அது அவர்களின் வேலையும் அல்ல…
    Editor TN Talks

    Related Posts

    மாஸ் ரெக்கார்டு!. 92 வருசமா தோல்வியே சந்திக்காத பிரேசில்!. 

    June 14, 2026

    ஜூன் 17-இல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

    June 14, 2026

    FIFA ஸ்டேடியத்தில் ரசிகரின் ‘ஸ்மார்ட்’ தில்லுமுல்லு!. போனை மது பாட்டிலாக மாற்றிய வினோதம்!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாஸ் ரெக்கார்டு!. 92 வருசமா தோல்வியே சந்திக்காத பிரேசில்!. 

    ஜூன் 17-இல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

    FIFA ஸ்டேடியத்தில் ரசிகரின் ‘ஸ்மார்ட்’ தில்லுமுல்லு!. போனை மது பாட்டிலாக மாற்றிய வினோதம்!

    அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்

    நீந்தக் கற்றுக்கொடுங்கள்… சிறுமி ரனா பாத்திமாவின் அசராத சமூகப் போராட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.