தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நானி நடிப்பில் வெளியாக உள்ள ‘தி பாரடைஸ்‘ படத்தில் இடம்பெற்ற ‘ஆயோ ஷேர்‘ பாடல் யூடியூப்பில் புதிய மைல்கல்லை எட்டி உள்ளது.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி பாரடைஸ்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஆயா ஷேர்’ (Aaya Sher) பாடல், சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் முதல் பல தளங்களில் இந்தப் பாடல் டிரெண்டிங்கில் உள்ள நிலையில், தற்போது யூடியூப்பிலும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

யூடியூப்பில் இந்தப் பாடலின் தெலுங்கு பதிப்பு மட்டும் 150 மில்லியன் (15 கோடி) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அத்துடன் 1.6 மில்லியன் (16 லட்சம்) லைக்குகளைப் பெற்று இணையத்தில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அண்மையில் ஐதராபாத்தில் நடந்த அனிருத்தின் இசைக் கச்சேரியில், இந்தப் பாடலுக்கு நானி உற்சாகமாக நடனமாடிய வீடியோவும் ரசிகர்களிடையே பெரும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம், இந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version