டைட்டானிக்.. இது ஒரு திரைப்படம் மட்டுமே அல்ல.. இது ஒரு காதல் காவியம் எனலாம். காதல் காவியங்கள் ஒருவரின் கற்பனையால் மட்டுமே தோன்றுவதில்லை. அது சில சமயம் உண்மை சம்பவங்களாகவும் இருக்கலம். அப்படியான ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் தான் டைட்டானிக்.

1997-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. ரோமியோ-ஜூலியட், அம்பிகாவதி-அமராவதி போன்ற காதலர்களின் வரிசையில், படமாக எடுக்கப்பட்டாலும் ஜாக்-ரோஸ் ஜோடி என்றென்றும் போற்றப்படுபவர்கள். இவர்களது காதல் கதை, இன்றைய இளைஞர்கள் வரை ஃபேவரைட் கதை. இந்த காதல் ஒரு பக்கம் இருந்தாலும், டைட்டானிக் கப்பல் மூழ்கிய அந்த ஒரு சம்பவம் எப்படி, ஏன், எதனால் என்ற பல கேள்விகளை நம்முள் ஏற்படுத்தியிருக்கிறது.

இதனை பற்றி தெரிந்து கொள்ள நாம் 113 ஆண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டும். 1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி பல்லாயிரம் பேரின் கனவுகளோடு கிளம்பியது டைட்டானிக் என்ற கப்பல். அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்து கொண்டிருந்த டைட்டானிக் கிளம்பிய 15 நாட்களில் அதாவது ஏப்ரல் 15-ம் தேதி நள்ளிரவில் பனிப்பறை ஒன்றில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 1,500 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நடந்து 113 ஆண்டுகள் ஆனாலும் கூட, டைட்டானிக் குறித்த ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும் இன்றளவும் ஓய்ந்தபாடில்லை. சமீபத்தில் டிஜிட்டல் ஸ்கேன் செய்யப்பட்டு ஆவணப்படம் ஒன்று வெளியானது. நேஷனல் ஜியோகிராஃபிக் மற்றும் அட்லாண்டிக் புரொடக்ஷன்ஸ் இணைந்து “டைட்டானிக்: தி டிஜிட்டல் ரெசரெக்ஷன்” என்ற ஆவணப்படத்தை வெளியிட்டது.

இந்த டிஜிட்டல் ஸ்கேன் மூலம், 3,800 மீட்டர் ஆழத்தில் டைட்டானிக் கப்பலில் சிதைந்து கிடந்த பாகங்களை 7.15லட்சம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. சிதைந்த பெரிய பாகங்கள் அனைத்தும் கடலின் மிக ஆழமான இருண்ட கடல் பகுதியில் உள்ளதால், இதுவரை அதனை ஆராய முடியவில்லை. இதுவரை செய்யப்பட்ட ஆய்விலேயே, இந்த டிஜிட்டல் ஸ்கேன் ஆய்வு தான் டைட்டானிக் கப்பலில் முழுமையான காட்சிகளை முதன்முறையாக தந்துள்ளது.

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் டைட்டானிக் கப்பலின் முன்பகுதி இப்போதும் பயணத்திற்கு தயார் என்ற நிலையில், பெரும் சிதைவின்றி காணப்படுவதாக கூறப்படுகிறது. 2022-ம் ஆண்டு சுமார் 6 வாரங்களாக ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் எடுத்து வந்த புகைப்படங்கள் மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.

இந்த நிலையில், பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ், டைட்டனிக் குறித்து, Titan The Oceangate Disaster என்ற பெயரில் ஒரு ஆவணப் படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப் படத்தை ஜூன் 11-ம் தேதி வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தில் நாம் எவ்வளவு தான் முன்னேறி இருந்தாலும் ஆழ்கடலில் உறங்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை பற்றி முழுமையாக இன்றளவும் அறிந்து கொள்ள முடியவில்லை என்பது ஆச்சர்யமே… என்ன சொல்லப் போகிறது இந்த நெட்பிளிக்ஸ் டாக்குமெண்டரி என்பதை பொருத்திருந்து பார்ப்போம்..

Share.
Leave A Reply

Exit mobile version