காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தளத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்தது. காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

இந்த சம்பவத்திற்கு பின்பு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் மூண்டது. எல்லையில் 4 நாட்களுக்கு இருநாட்டு படைகளுக்கு இடையே தாக்குதல் நீடித்தது. பின்னர் மோதல் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவுக்கு வந்தது. இருப்பினும் ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறியது.

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்கு போர்குணம் இல்லை என பாஜக எம்.பி ராம் சுந்தர் ஜங்ரா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவின் பிவானி பகுதியில் மகாராஷ்டிர ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், நமது தங்கள் கைகளை கட்டிக் கொண்டு உயிரை இழந்திருப்பதாகவும், சுற்றுலாப் பயணிகள் ஒருவேளை அக்னிவீர் பயிற்சி பெற்றிருந்தால், வெறும் பயங்கரவாதிகளால் 26 பேரை கொன்றிருக்க முடியாது என்றார்.

மேலும் பயங்கரவாதிகளை எதிர்த்து அவர்கள் போராடியிருக்க வேண்டும் எனவும், அப்படி எதிர்த்து போராடியிருந்தால், உயிரிழப்புகள் குறைவாக இருந்திருக்கும் எனவும், பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களிடம் போர்க்குணம், துணிச்சல் மற்றும் வைராக்கியம் இல்லை எனவும், இதனலேயே பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்தார்.

பயங்கரவாதிகளுகு எதிராக பெண்கள் எவ்வாறு போராடுவார்கள் என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அஹில்யாபாய் ஹோல்கர் ஒரு பெண், ராணி லட்சுமிபாயும் அப்படித்தான். அவர்கள் போராடவில்லையா? எங்கள் சகோதரிகள் தைரியமாக வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

பாஜக எம்பி சந்தர் ஜங்கராவின் இத்தகைய பேச்சு, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கணவரை இழந்த பெண்களை விமர்சிக்கும் விதமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக இந்திய ராணுவத்தை சேர்ந்த கர்னல் சோபியா குரேஷியை பஹல்காம் பயங்கரவாதிகளின் சகோதரி என மத்திய பிரதேச பாஜக எம்.பி குன்வார் விஜய் ஷா பேசியிருந்தது பெரும் பேசுபொருளானது. நீதிமன்றமே அவர் மீது வழக்கு தொடுக்க உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version