வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

நடிகர் சூர்யா தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இப்படத்தின் புதுப் பாடல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை நடிகர் சூர்யா தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. முழுப் பாடல் வரும் 25ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தெரிவித்துள்ளது.

சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெங்கி அட்லூரி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ள ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ வரும் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version