மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான ’பறந்து போ’ திரைப்படத்தின் ஓடிடி ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட தரமான படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் இயக்குநர் ராம். இவரது இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் பறந்து போ. மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தந்தை, மகனுக்கு இடையேயான பசப்பிணைப்பை வெளிப்படையாக இப்படம் காட்டியிருந்ததால், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது ’பறந்து போ.’ இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற 5-ம் தேதி ஜியோ ஹாட்ஸ் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version