அல்லு அர்ஜூன் நடிப்பில் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற ‘புஷ்பா 2’ திரைப்படம் ஜப்பான் மொழியில் வெளியாக உள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ல் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, கடந்த 2024ல் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது. ஃபகத் ஃபாசில், ரஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்திநிலையில், ‘புஷ்பா 2’ திரைப்படம் 2026ல் ஜப்பான் மொழியில் வெளியாக உள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கீக் பிக்சர்ஸ் இந்தியா நிறுவனம் விநியோகிக்கும் ‘புஷ்பா 2’ படத்தின் ஜப்பான் மொழி டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
‘புஷ்பா’ திரைப்படத்தில் ஸ்ரீசைலம் பகுதியில் வெட்டப்படும் செம்மரம் ஜப்பானுக்கு கடத்தப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். இந்தநிலையில், தற்போது ஜப்பான் மொழியில் ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
