நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா தொழிலதிபராக மாற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. ’சுல்தான், வாரிசு’ படங்கள் மூலம் தமிழில் ஃபேமஸ் ஆனார் ராஷ்மிகா. அதற்கு முன்னதாக தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ’டியர் காமரேட்’ என்ற படத்தில், ”இங்கி, இங்கி இங்கி காவாலே” என்ற பாடல் மூலம் நேஷனல் கிரஷாக மாறிப் போனார் ராஷ்மிகா மந்தனா.

தொடர்ந்து பான் இந்தியா படங்களான புஷ்பா 1, புஷ்பா 2, படம் மூலம் பான் இந்தியா நடிகையானார் ராஷ்மிகா. குறைந்த காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமாகியுள்ளார் ராஷ்மிகா. இவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.60கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தனது தாயாருடன் வீடியோ காலில் உரையாடிய ராஷ்மிகா, ”இன்று நான் ஒரு மிக முக்கியமான படப்பிடிப்பிற்கு செல்கிறேன். நீங்கள் சொன்னது போல் தொழிலை நான் தொடங்குவேன்” என கூறியிருக்கிறார். அந்த வகையில் எந்த தொழிலில் அவர் முதலீடு செய்யவுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. உலகில் முன்னணி பிரபலங்கள் பலர் ரியல் எஸ்டேட், ஓட்டல்கள், நகைக் கடை மற்றும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருவது சமீப காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version