தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. தமிழில் ’கண்ட நாள் முதல்’ என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றியவர், ’அழகிய அசுரா’என்ற படத்தில் கதாநாயகியாக உருவெடுத்தார். ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து, ‘நிர்ணயம்’, ‘ராஜதந்திரம்’, ‘மாநகரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’, ‘விடாமுயற்சி’, ‘பார்டர்’, ‘ஃப்ளாஸ் பாக்’ ஆகிய படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார் ரெஜினா கசாண்ட்ரா. சமீபத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘விடா முயற்சி’ படத்தில் வில்லியாக நடித்து அசர வைத்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் தாண்டி பாலிவுட்டில் சன்னி தியோலுடன் ’ஜாத்’, அக்‌ஷய் குமார் அனன்யா பாண்டேவின் ‘கேசரி2’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து தமிழில் சுந்தர்.சி. இயக்கத்தில் மூக்குத்தி அம்மன்2-ம் பாகத்திலும் பிசியாக நடித்து வருகிறார். 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரெஜினா கசாண்ட்ரா பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version