நடிகர் சூர்யா தயாரிப்பு, நடிப்பு என இரண்டிலும் பிசியாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவரது தயாரிப்பு மற்றும் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ரெட்ரோ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சூர்யாவின் 44-வது படமாக வெளியான ரெட்ரோ, உலகளவில் ரூ.234 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ஆர்.ஜே.பாலாஜி இயக்கம், நடிப்பு என இரண்டிலும் கலக்கி வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் வெளியான மூக்குத்தி அம்மன், எல்.கே.ஜி போன்ற படங்கள் வெற்றியடைந்தன. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் 45-வது படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். அத்தோடு சூர்யாவிற்கு ஜோடியாக திரிஷாவும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகிபாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி, நட்டி நட்ராஜ் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இப்படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ”கருப்பு” என பெயரிடப்பட்டுள்ளது.