ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்துல நடிகர் சூர்யா திரிஷா உட்பட பலர் நடிப்புல வெளியான கருப்பு திரைப்படம் இரண்டு வாரங்களை தாண்டி வெற்றிக்கரமா திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. நீதிமன்றங்களில் நடைபெறும் அநீதிகளை எதிர்க்க மக்களோடு கருப்புசாமி நேருக்கு நேர் போராடுவது போன்ற கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த 15-ம் தேதி வெளியான இத்திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.300கோடி வசூலை கடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், படத்தின் எடிட்டரான கலைவாணன் சமீபத்திய பேட்டியில், படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ படத்தில் இருந்து எந்தவொரு நீண்ட காட்சியும் நீக்கப்படவில்லை. சில கௌரவத் தோற்றங்கள் மற்றும் துணைக் கதாபாத்திரங்கள் இடம்பெற்ற குறுகிய காட்சிகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த நேரம் 20 முதல் 30 நொடிகள் வரைதான் இருக்கும்” என்றார்.
மேலும், ஆர்யாவின் கௌரவத் தோற்றம், இரட்டை மருத்துவர் சகோதரர்கள் இடம்பெறும் மெட்ரோ காட்சி மற்றும் ‘தி கோட்’ ஜீவா தோன்றும் காட்சி ஆகியவை படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். “நீக்கப்பட்ட காட்சிகளில் ஆர்யா சாரின் காட்சிதான் மிக நீளமானது. அந்த காட்சி விரைவில் ‘Deleted Scene’ ஆக தனியாக வெளியிடப்படும்” என்றும் கலைவாணன் கூறியுள்ளார். இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆர்யாவின் நீக்கப்பட்ட காட்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
