ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023ல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது அந்த திரைப்படத்தின் 2ம் பாகமான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் ‘ஜெயிலர் 2’ படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார்.
முதல் பாகத்தை போன்றே, ‘ஜெயிலர் 2’ படத்திலும் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தாண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு ‘ஜெயிலர் 2’ திரைக்கு வர உள்ளது.
