தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் விஜய்யை போல நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இயக்கம் பக்கம் திரும்பினார். கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி அதிகாரப்பூர்வமாக படபூஜையும், படப்பிடிப்பும் தொடங்கியது. லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்தது. இப்படத்திற்கு ’சிக்மா’ என தலைப்பும் வைக்கப்பட்டது.

சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருடன் பரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷனுடன் சேர்ந்து ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் கடந்தாண்டு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஹைதராபாத்திற்கு வந்திறங்கினார் ஜேசன் சஞ்சய். இந்த நிலையில், சிக்மா திரைப்படம் ஜூலை மாதம் 31-ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version