சென்னையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில், சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஷர்புதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருமங்கலத்தில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக தியாகேஸ்வரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், ஆந்திராவைச் சேர்ந்த சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஷர்புதீனுக்கு கஞ்சா விற்றது தெரியவந்தது.
இதனையடுத்து ஷர்புதீன், சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் சரத், முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த சீனிவாசன் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர், 10 கிராம் கஞ்சா, சுமார் 27 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version