“நீயும் நானும் சமோனும் ஒரே பறவையின் இறகுகள்” என்று ஹேவனிடம் மைக்கோல கெல் சொல்லும் இந்த ஒரு வரி வசனம் தான், இந்த Sirens-வெப் சீரிஸின் மொத்த உருவாக்கமே.

ஞாபக மறதியான தன் தந்தையை பார்த்துக்கொள்ள ஹேவன்( மேகன் பாஹி) தனது சகோதிரி சைமன் ( மில்லி அல்காக்) உதவியை நாடி அவள் பணிபுரிந்துக்கொண்டு இருக்கும் மிக ஆடம்பர தீவுக்கு பயணமாகிறாள். அந்த தனி தீவின் முதலாளியான மைக்கோல கெல்லுக்கும் ( ஜுலியான் மூர்) ஹேவனுக்கும் சைமனுக்கு நடக்கும் குச்சுபுடி ஆட்டம் தான், டார்க் காமெடி தான் இந்த சீரிஸ் .

மூன்று பெண்கள் வெவ்வேறு தேவைகள், ஆனால் பணம் தான் பிரதானம். இதில் யாருக்கு என்ன கிடைக்கிறது என்று போகிறது இந்த தொடர். வாழ்க்கை அதன் திசையில் போவதாக நாம் நினைக்கு அந்த ஒரு நொடி தான், நம்மை தேடி சிக்கல் வரும். அப்படியாக தான் ஹேவன் தன் தங்கையை தேடி பயணமாகிறாள். ஹேவன் ஒரு உல்லாச படகில் பயணமாகும் போதே அந்த கப்பலின் கேப்டனிடம் அப்ஃயைர் ஆகிறாள். அதற்கு முன்னும் ஒரு பாய் பிரண்ட். அவளுக்கு இருக்கிறான். அது போக அந்த ஆடம்பர பங்களாவில் ஒரு சிப்பந்தியுடன் நெருக்கம் ஆகிறாள். இதெல்லாம் எந்த ஒரு வக்கிரம் இல்லாமல் மிக நகைச்சுவையாக சொல்லப்படுகிறது. அந்த மூன்று ஆண்களும் ஒரு இரவில் அந்த கடற்கரை பீச்சில் ஒரு மாறி ஒருவர் அவளை இம்பர்ஸ் செய்யும் காட்சியெல்லாம் காமெடியின் உச்சம்.

சைமன் தன் முதலாளியான மைக்கோல கெல்லிடம் தன்னை பற்றி எல்லா உண்மைகளையும் மறைத்து அவளுடன் மிக நெருக்கமாக பழகி அவளின் நன்மதிப்பை பெற்று அவளுக்கு எல்லாமே ஆகிறாள். அவளுக்கு அந்ததீவில் இருக்கும் ஒரு பணக்காரனுடன் காதலிலும் இருக்கிறாள். பின் ஒவ்வான்றாக உடைந்து தன்னுடைய கடந்த காலத்தை சொல்லி மீண்டும் அவளுடன் இணையும் போது ஒரு சிக்கலில் மைக்கேல் கெல் அவளை வேலையை விட்டு நீக்க, அதன் பிறகு சமோன் எடுக்கும் அந்த முடிவும் வேறுவிதமாக முடிகிறது.

மைக்கேல் கெல் மொத்த கதையின் மையமே இவள் தான் என்னும் போது.. அது அப்படி அல்ல தான் மிக சாதாரணமானவள் என்று இறுதி காட்சியில் சொல்லமால் சொல்கிறாள். பறவைகளை நேசிப்பதும் அந்த தீவில் இருக்க தான், தான் மிக சரியானவள் என்று தன் கணவனிடம் கூறும் அந்த காட்சியும் அழகு. அவளை சுற்றி ஒரு மர்மம் இருப்பது போல ஒரு தோற்றத்தை கொடுத்து, அதெல்லாம் ஒன்றுமே இல்லை அவளும் மிக சாதாரணமானவள் என்று முடிக்கிறார்கள். நம் வாழ்க்கை யாவும் மைக்கோல் கெல் போலதான் எதிர்பாரததை எதிர்பாருங்கள் என்பது போல..

ஆண்களுக்கு பெண் தேவையாக இருக்கிறார்கள். பெண்கள் அதை சுற்றியே தங்கள் வாழ்வை நிலை நிறுத்திக் கொள்கிறார்கள். ஞாபக மறதியான அப்பாவாகட்டும், சைமனை காதலிக்கும் அந்த பணக்காரனாகட்டும் ஹேவனை சுற்றிவரும் மூன்று ஆண்கள் ஆகட்டும் அவர்களுக்கு பெண் தேவையாக இருக்கிறது. “லஸ்ட்” இந்த கதையில் ஒரு பகுதியாக இருந்தாலும், அதை பூடகமாகவே சொல்லியிருக்கிறார்கள். லஸ்ட் மட்டுமல்ல, காதல், பாசம் எல்லாமே மேலோட்டமாகவே இருக்கிறது. ஆடம்பரம் மட்டுமே பிரதானம். உண்மையில் இந்த தொடரின் நோக்கமே இதுதான் போல.. இவையெல்லாம் பார்த்து ரொம்ப சீரியஸான தொடர் என்று நினைக்க வேண்டாம்.

அட்டகாசமான காஸ்ட்யூம் டிசைன், அழகான லொக்கேஷன், வித்தியமான கேமரா கோணங்கள். சில்லிடவைக்கும் பின்னனி இசை என்று இந்த தொடர் நம்மை எப்படியோ பார்க்க வைத்துவிடுகிறது. ஆங்கங்கே தெறிக்கும் காமெடியும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. மிகவும் சீரியஸ் ஆன ஓர் இடத்தில் ஹேவனின் தந்தை, மைக்கோல் கெல்லிடம் நான் உன்னை Fuck 😂 பன்னபோறேன் என்று சொல்லுமிடம் உண்மையில் கொடூரம் 😛.

டார்க் காமெடி வகையான இந்த வெப்சீரிஸ் நமது அந்தரங்க அபிலாசைகளும் இருமையில் நகரும் ஒரு அவல நகைச்சுவை தான் என்று சொல்கிறது போலும். ” நான் உன்கிட்ட கொடுத்த செக்கை உடனே பேங்க்-ல போட்டு அதை பணமா மாத்திக்கோ, இல்லையென்றால் அது வேஸ்ட் ஆகிடும். ஒரு பொருள் அழியறதுக்கு முன்னே அனுபவிக்கனும் அது தான் இந்த வாழ்க்கை நமக்கு சொல்லும் ஒரே பாடம் என்கிற வசனத்துடன் முடிகிறது.

சீரிஸின் தொடக்க வசனமும், இறுதி வசனமும் இதை தான் நமக்கு சொல்கிறது..நாம் எல்லோரும் ஒரே பறவையின் இறகுகள் தானே!! நெட்பிளிக்ஸில் இருக்கிறது. வார இறுதி நாளில் பொழுதை கழிக்க ஏற்ற வெப்- சீரீயஸ்

Viji’s palanichamy.

Share.
Leave A Reply

Exit mobile version