‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சசி மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் “நூறு சாமி” (Nooru Saami). ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
‘நூறு சாமி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலரை பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் நாளை (ஜூன் 8)வெளியிடுகிறார். இதற்காக பிரத்யேகமாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு போஸ்டரில் நடிகர் சிவகார்த்திகேயனின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி, வசூலிலும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த ‘பிச்சைக்காரன்’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி ஜோடி மீண்டும் இந்தப் படத்திற்காக இணைந்துள்ளது. இதனால் கோலிவுட் வட்டாரத்தில் இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இத்திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. விஜய் ஆண்டனியின் வித்தியாசமான நடிப்பு மற்றும் இயக்குநர் சசியின் எமோஷனல் கதைக் களம் ‘நூறு சாமி’ திரைப்படத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
