‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினைத் தொடர்ந்து, விஷால் படத்தினை உடனடியாக தொடங்க முடிவு செய்திருக்கிறார் சுந்தர்.சி.

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் திரைக்கு வரவுள்ளது. இதனிடையே, தனது அடுத்த படத்தினை உடனடியாக தொடங்க சுந்தர்.சி முடிவு செய்திருக்கிறார்.

ஏசிஎஸ் நிறுவனம் மற்றும் விஷால் இணைந்து தயாரிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் சுந்தர்.சி. இதன் படப்பிடிப்பு டிசம்பர் 5-ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோ ஷுட் முடிவடைந்துவிட்டது. குடும்ப பின்னணி கொண்ட ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தினையும் ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி

இதில் நாயகியாக தமன்னா நடிக்கவுள்ளார். இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா பணிபுரியவுள்ளார். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version