இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதாவது, டாக்டர் கலைஞர் விளையாட்டுத் தொகுப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு 16,798 விளையாட்டுத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

4,226 விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளத் தேவையான விளையாட்டுக் கருவிகளைத் தமிழ்நாடு வாகையர் அறக்கட்டளை வழங்கி உள்ளது.

தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்த 5,403 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.176 கோடி இதுவரை வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு 101 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

மாநில அளவில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா-இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளை நடத்திட 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடே வியக்கும் வண்ணம் கடந்த 2022-ம் ஆண்டில் நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதல் இளையோருக்கான உலகக் கோப்பை ஆக்கி போட்டிகள் வரை பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் சிறப்புற நடத்தப்பட்டதைப் பாராட்டும் விதமாக, இந்தியத் தொழில் துறைக் கூட்டமைப்பின் விளையாட்டு விருதை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கடந்த 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் வென்றெடுத்துள்ளது.

விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் எனும் விருது உள்ளிட்ட மேலும் பல விருதுகளையும் தமிழ்நாடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில் கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.612 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பால் பண்ணைகள் நவீனமயமாக்கலுக்காக ரூ.758 கோடி செலவிடப்பட்டுள்ளது.  வீட்டுவசதி, நகர்ப்புறத்துறைக்கு ரூ.7,547 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறைக்கு ரூ.1,694 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு

மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து நிதி வழங்காத நிலையிலும் ஆசிரியர், அரசு ஊழியர் நலனை காத்து வருகிறோம்.

அரசு பணியில் இருப்பவர் விபத்தில் உயிரிழக்கும் பட்சத்தில் ரூ.1 கோடி வழங்கப்படும்.

ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணமாக பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அமைதியான மாநிலமாக திகழ்கிறது. 5 ஆண்டுகளில் புதிதாக 43 காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 23.50 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 17318 பேர் புதிதாக காவல்துறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

போதை பொருள்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தூதுவர்களாக 4 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகளில் 17,000 போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 41.23% பங்களிப்புடம் தமிழ்நாடு முதலிடம்.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறைக்கு ரூ.17,111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version