சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படம் என கொடுத்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ’ஜெயிலர்’ படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், அதன் இரண்டாம் பாகமும் எடுக்கப்படவுள்ளது.

தற்போது அவரிடமிருந்து மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பாக இருப்பது ’கூலி’ திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிறவைத்துள்ளது. வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ளதால் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுபாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ’ஜெயிலர் படத்தின் இரண்டாம்’ பாகத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த நிலையில், ரஜினியின் அடுத்த படம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ’சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற திரைப்படம் வெளியானது. நானி, பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூரியா உட்பட பலர் நடிப்பில் வெளியா இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் ரூ.100கோடியை தாண்டியது.

இப்படத்தின் இயக்குநர் ஆத்ரேயா ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் ’குட் பேட் அக்லி’ பட தயாரிப்பு நிறுவனமான ’மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்’ தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version