திரை உலகின் மிக உயரிய விருதான 98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விருதுப் பட்டியலில் ‘Sinners’ மற்றும் ‘One Battle After Another’ ஆகிய திரைப்படங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தின.
விருதுகளை அள்ளிய ‘Sinners’ மற்றும் ‘One Battle After Another’: இந்த ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான விருதை ‘One Battle After Another’ தட்டிச் சென்றது. அப்படத்தின் இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றார். மேலும், One Battle After Another திரைப்படம் 6 ஆஸ்கார் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், துணை நடிகர் (ஷான் பென்), தழுவல் திரைக்கதை, படத்தொகுப்பு மற்றும் நடிகர்கள் தேர்வு ஆகிய 6 பிரிவுகளில் இப்படம் விருதை இப்படம் விருதுகளை குவித்துள்ளது.
திக ஆஸ்கார் விருதுகளை வென்ற படம் என்ற சாதனையை படம் படைத்துள்ளது. முன்னதாக வழங்கப்பட்ட கோல்டன் குளோப் விருந்துகளிலும் அதிக விருதுகளை வென்று One Battle After Another சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், மற்றொரு முக்கியத் திரைப்படமான ‘Sinners’ பல முக்கியப் பிரிவுகளில் விருதுகளைக் குவித்தது. அதாவது,
சிறந்த நடிகர்: மைக்கேல் பி ஜோர்டன் (படம்: Sinners)
சிறந்த திரைக்கதை, இயக்கம் & பின்னணி இசை: Sinners படத்திற்கு வழங்கப்பட்டது.
சிறந்த நடிகை: ஜெஸ்ஸி பக்லி (படம்: Hamnet)
சிறந்த காட்சி அமைப்பு (Visual Effects): Avatar: Fire and Ash
பிராட் பிட் நடித்த ‘F1’, சிறந்த ஒலிப்பதிவிற்கான விருதை வென்றுள்ளது. இப்படம் உலகளவில் 3626 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிறந்த குணச்சித்திர நடிகராக சீன் பென் மற்றும் சிறந்த குணச்சித்திர நடிகையாக எமி மடிகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
ரியான் கூக்ளரின் பீரியட் ஹாரர் (Period Horror) திரைப்படமான ‘சின்னர்ஸ்’ (Sinners), ஆஸ்கர் வரலாற்றிலேயே ஒரு படத்திற்கு வழங்கப்பட்ட அதிகப்பட்ச பரிந்துரைகள் என்ற புதிய சாதனையை இன்று இரவு படைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஆல் அபௌட் ஈவ் (All About Eve), டைட்டானிக் (Titanic) மற்றும் லா லா லேண்ட் (La La Land) ஆகிய படங்கள் தலா 14 பரிந்துரைகளைப் பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது ‘சின்னர்ஸ்’ திரைப்படம் 16 பரிந்துரைகளைப் பெற்று அந்தச் சாதனையை முறியடித்துள்ளது.
இதற்குப் பலத்த போட்டியாக இருப்பது பால் தாமஸ் ஆண்டர்சனின் அரசியல் திரில்லர் படமான ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ (One Battle After Another). இது 13 பரிந்துரைகளைப் பெற்றுள்ளதுடன், விமர்சகர்கள் மற்றும் பல்வேறு திரைப்பட சங்கங்களின் விருதுகளையும் இதுவரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
FRANKENSTEIN திரைப்படம் 3 ஆஸ்கார் விருதுகளை வென்று அசத்தியுள்ளது. தயாரிப்பு வடிவமைப்பு, ஒப்பனை – சிகை அலங்காரம் மற்றும் ஆடை வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் FRANKENSTEIN திரைப்படம் ஆஸ்கார் விருதுகளை தட்டிச் சென்றது.
ராயல் லுக்கில் பிரியங்கா சோப்ரா: இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனஸுடன் ராயல் லுக்கில் ஆஸ்கர் சிவப்பு கம்பளத்தில் தோன்றியது ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்தது. ‘டியோர்’ (Dior) நிறுவனத்தின் வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் தேவதையாய் வந்த அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் ஆஸ்கர் மேடையில் தோன்றிய பிரியங்கா, இந்த ஆண்டும் விருது வழங்கும் தொகுப்பாளராகப் பங்கேற்றுப் பெருமை சேர்த்துள்ளார்.
