‘டாக்சிக்’ படத்தின் இசைப்பணிகளை 2 இசையமைப்பாளர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்து வரும் படம் ‘டாக்சிக்’. கே.வி.என் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிவடையாத காரணத்தினால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு வந்தது. தற்போது மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.

’டாக்சிக்’ படத்தில் யஷ் உடன் நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். முதலில் கீது மோகன்தாஸ் கதை, திரைக்கதையில் உருவான இப்படம், தற்போது இதில் யஷ் பெயரும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version