துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I’m Game’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நஹாஸ் இதயத் இயக்கத்தில் துல்கர் சல்மான், காயத்ரி லோஹர், ஆண்டனி வர்கீஸ், வினய் ஃபோர்ட், மிஷ்கின், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் பார்த்தி திவாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி வாழும் ஒரு துணிச்சலான சூதாட்டக்காரன் எதிர்பாராதவிபரீதமான நிகழ்வுகளில் சிக்கிக்கொண்டு, தனது வாழ்க்கையைத் தக்கவைக்கப் போராடுவதே இப்படத்தின் மையக்கரு.

ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் கலந்த ஒரு விறுவிறுப்பான அனுபவமாக இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ஆகஸ்ட் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version