கடந்த ஒரு வாரமாகவே எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் வாரணாசி திரைப்படம் குறித்த விஷயம் சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. சுமார் 25 முதல் 27 கோடி ரூபாய் செலவில் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அத்திரைப்படத்தின் பெயர் வெளியீட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமாக எஸ் எஸ் ராஜமௌலி நடத்தி முடித்தார்.

இத்திரைப்படத்தில் கதாநாயகனாக தெலுங்கு திரை உலக சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் கேரளா நடிகர் பிரித்திவிராஜ் சுகுமாரன் நடிக்கின்றனர்.
படத்திற்கு எஸ் எஸ் ராஜமௌலியின் ஆஸ்தான மற்றும் அவருடைய நெருங்கிய உறவினரான எம் எம் கீரவாணி தான் இசையமைக்கிறார். இவர்கள் இருவரது கூட்டணி ஸ்டுடென்ட் நம்பர் 1 தொடங்கி தற்பொழுது வாரணாசி வரை வந்து நிற்கிறது. சுருக்கமாக சொல்லப்போனால் ராஜமௌலி இயக்கிய அனைத்து படத்திலும் எம் எம் கீரவாணி தான் இசையமைப்பாளர். இவர்கள் இருவரும் இணையும் 14ஆவது திரைப்படம் வாரணாசி ஆகும்.

தற்பொழுது கோவில் சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்று வருகிறது. அத்திரைப்பட விழாவில் பத்திரிக்கை நிருபர் ஒருவர் எம் எம் கீரவாணியிடம் வாரணாசி குறித்த அப்டேட் கேட்டு இருக்கிறார். அதற்கு இசையமைப்பாளர் கீரவாணி “நீங்கள் எதிர்பார்ப்பதை விட வாரணாசி திரைப்படம் மிக பிரம்மாண்டமாக இருக்கும். படம் நல்லபடியாக தயாராகி வருகிறது. படத்தில் மொத்தம் ஆறு பாடல் உள்ளது”, என படத்தின் முக்கிய அப்டேட்டை மிக கேஷுவலாக கீரவாணி கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
https://x.com/PTI_News/status/1991854806739325032?t=SaWeRrcpl-JnLQDV1oViwA&s=19
வாரணாசி திரைப்படம் 1200 முதல் 1300 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாராகி வருகிறது. குறிப்பாக திரைப்படம் 120க்கும் அதிகமான நாடுகளில் வெளியாக போவது கூடுதல் சிறப்பு.
