தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படம் ( அரசியல் வாழ்க்கைக்கு சென்று விட்டதால் திரை உலகில் அவருடைய கடைசி திரைப்படம் ), வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் அன்று பட்டிதொட்டி எங்கும் கோலகாலமாக வெளியாக உள்ளது.

படத்தின் முதல் பாடல் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி அனைத்து ஏரியாக்களிலும் நல்ல வரவேற்பையும் பெற்றது. தளபதி விஜய் திரைப்படம் வருவதற்கு முன்பாக திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிக விமர்சையாக நடைபெறும். அதிலும் குறிப்பாக ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசும் பேச்சு அனைவரும் ரசிக்கப்படும் படியாக இருக்கும்.

தளபதி விஜய் நடிப்பில் அவருடைய கடைசி திரைப்படமாக அமைய இருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்குமா நடக்காதா? என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா ( கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் உரிமையாளர் ) அதிரடியான முடிவு ஒன்றை தற்பொழுது எடுத்துள்ளார்.

ஆம் ஜனநாயகன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறார். ஜனநாயகன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தமிழ்நாட்டில் நடைபெற போவதில்லை. அதற்கு பதிலாக மலேசியாவில் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் நடைபெறப் போகிறது.

இச்செய்தி சில வாரங்களுக்கு முன்பே இணையத்தில் கசிந்தது. இருப்பினும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தயார்பு நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் வரை நாம் எதையும் உறுதியாக கூறி விட முடியாது என்று இருந்த நிலையில், சற்று முன்னர் கே வி என் ப்ரொடக்ஷன் எக்ஸ் வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

https://x.com/KvnProductions/status/1991774931311554838?t=Vm64tQdDDYtgicRVokdplw&s=19

ப்ரோமோ வீடியோ மலேசிய பின்னணியை உள்ளடக்கி எடுக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது எல்லாவற்றையும் ஒன்றிணைத்து பார்க்கையில் நிச்சயமாக அடுத்த மாதம் இறுதியில் ஜனநாயகன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு மலேசியாவில் பிரம்மாண்டமாக நடக்கப்போவது உறுதியாகிவிட்டது.

ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக யார், யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்வி தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version