டிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளரான விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘அப்பா குட்டி’ குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மு. மாறன். இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம், தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்ட ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகியுள்ளது.

சமூக உணர்வுகளும், குடும்ப பாசமும் கலந்த கதைகளை வித்தியாசமான முறையில் சொல்லும் திறன் கொண்ட மு.மாறன், இந்தப் படத்தையும் உணர்ச்சி, அதிரடி மற்றும் குடும்ப நெகிழ்ச்சிகள் இணைந்த திரைக்கதையுடன் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், தற்போது பின்னணி பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, உணர்ச்சி ஆழமுள்ள அதிரடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், தந்தை – மகள் உறவின் பாசப்பிணைப்பை மையமாகக் கொண்ட கதை ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்யும் என்றும் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

படத்தில் நடிகைகள் ப்ரீத்தி அஸ்ரணி, லிதான்யா ஆகியோருடன் பகவதி பெருமாள், ஹரிபிரியா, இசையருவி மதன், சித்ரா லக்ஷ்மணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் தீவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவை ராஜீவ் ராஜேந்திரன் மேற்கொண்டுள்ள நிலையில், இசை மற்றும் எடிட்டிங் பணிகளை விஜய் ஆண்டனி கவனித்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை ஏ. ராஜா மேற்கொண்டுள்ளதுடன், சண்டைக் காட்சிகளை ராஜசேகர் அமைத்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version