கன்னியாகுமரியில் அரசு பொறியியல் கல்லூரியில் போலி பணி நியமன ஆணை வழங்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில், தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,

விழுப்புரத்தில் பதுங்கி இருந்த செல்வகுமார், முகமது இஸ்மாயில், பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலி அரசு பணி ஆணைகள் மற்றும் அதற்கு பயன்படுத்திய போலி அரசு முத்திரைகள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து மூவரையும் சிறையில் அடைத்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version