ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகாம்களை முன்னாள் எம்பி. சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முகாம் நடைபெற்று வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து வருகின்றனர். ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட பணகுடி, மற்றும் வள்ளியூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்குச்சாவடி வாக்காளர் சிறப்பு முகாம்களை முன்னாள் எம்பியும், அதிமுக நெல்லை புறநகர் மாவட்ட கழக பொருளாளருமான P.சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பால்துரை, பணகுடி நகரச் செயலாளர் GT.லாரான்ஸ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் இளைய பெருமாள், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கைலாசம், கிளை செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
