சென்னை அணிக்காக களம் இறங்கி வெற்றி தேடி தந்து இந்திய அணி கபடி வீராங்கனை *கண்ணகி நகர் கார்த்திகா* கலக்கினார்.
தமிழ்நாடு அமச்சூர் கபடி கழகம், கன்னியாகுமரி மாவட்ட அமச்சூர் கபடி கழகம்  சார்பில் குமரி மாவட்டம் *திருநயினார்குறிச்சியில் 72வது தமிழ்நாடு மாநில சீனியர் பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் 5ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 36 அணிகள் பங்கேற்று உள்ளன. இதில் சிறப்பாக விளையாடும்  வீராங்கனைகள் தமிழ்நாடு மாநில அணிக்கும் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். சென்னை அணிக்காக இந்திய அணியின் கபடி விளையாட்டு வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.
முன்னதாக அரியலூர் மற்றும் சென்னை மாவட்டங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் தன்னுடைய அணிக்காக பல்வேறு புள்ளிகளை பெற்றுக் கொடுத்து வெற்றி பெற வைத்தார். இந்த போட்டியில் 37-25 என்ற புள்ளி கணக்கில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
அதற்கு அடுத்த போட்டியில் சென்னை மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட அணிகள் மோதின. இந்த போட்டியை திருநெல்வேலி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பல்கலைக்கழக கபடி விளையாட்டு வீரருமான சௌந்தரராஜன் வீராங்கனைகளை அறிமுகம் செய்து வைத்து சென்னை -ராணிப்பேட்டை மாவட்ட அணிகளுக்கு இடையேயான போட்டியை துவக்கி வைத்தார்.  இந்திய  கபடி அணிக்கு பெருமை தேடி தந்து  சென்னை கண்ணகி நகருக்கே அடையாளமாக மாறிய கண்ணகி நகர் கார்த்திகாவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து நடந்த சென்னை -ராணிப்பேட்டை அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 25-7 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. கபடி போட்டியை நடத்தும்   திருநயினார்குறிச்சி அணியில் தான் இந்திய கபடி அணியின் கேப்டனாகவும்,  முதல் முறையாக கபடி போட்டியில் அர்ஜுனா விருது பெற்று குமரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த ராஜரத்தினம் விளையாடிய அணி நயினார் குறிச்சி அணி என்பதும்  குறிப்பிடத்தக்கது.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version