நெல்லை மாவட்டம் பழவூர் அருகே மாநில அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டியை அதிமுக முன்னாள் எம்பியும், பல்கலைக்கழக கபடி விளையாட்டு வீரருமான சௌந்தரராஜன் துவக்கி வைத்தார்.
பழவூர் அருகே யாக்கோபு புரத்தில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியை அதிமுக புறநகர் மாவட்ட கழக பொருளாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பல்கலைகழக கபடி விளையாட்டு வீரருமான சௌந்தரராஜன் வீராங்கனைகளை அறிமுகம் செய்து வைத்து போட்டியினை துவக்கி வைத்தார்.
இந்தப் போட்டியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் ஆனது நாக் அவுட் முறையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி வரும் அணிக்கு முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக பதிணைந்தாயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக ஏழாயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
