2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கு இன்றே (டிச.23) கடைசி நாளாகும்.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் எட்டாவது நாளாக இன்றும் மிகுந்த ஆர்வத்துடனும், விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளித்தனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதற்காக கூட்டணியை பலப்படுத்துவது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்பது என தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பணிகளை வேகப்படுத்தி உள்ளன. தேர்தல் பிரச்சாரத்தை முன் கூட்டிய துவக்கிய அதிமுக, தற்போது சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது.

கடந்த 15 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, 15 ஆம் தேதி முதல் ஏராளமான அதிமுகவினர் விருப்ப மனு அளித்து வருகின்றனர். எட்டாவது நாளான இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராமலிங்கம், அதிமுக அமைப்பு செயலாளர் வெங்கடேஷ் பாபு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் கோயம்புத்தூர் சத்யன் ஆகியோர் விருப்ப மனு வழங்கியுள்ளனர்.

மேலும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், ஏற்காடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சித்ரா, அமைப்புச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், நீலகிரி மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் விருப்பம் மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளித்தனர்.

அதிமுகவினர் அளித்து வரும் விருப்ப மனுக்களை அமைப்பு செயலாளர்கள் முன்னின்று பெற்று வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் தினந்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்​கள் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்​ணப்​பங்​களை​ காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கலாம். கடந்த 15ஆம் தேதி தொடங்கிய விருப்ப மனு விநியோகம் நாளையுடன் நிறைவடைகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளுக்கான அதிமுக விருப்ப மனு ரூ.15,000-க்கும், புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான விருப்ப மனு ரூ.5000-க்கும் வழங்கப்பட்டு வருகிறது. போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் ரூ.15,000-க்கு வரைவோலை எடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்றைக்குள் (டிச.23) முறையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version