Close Menu
    What's Hot

    துருக்கியில் பெரும் விமான விபத்து!. லிபிய இராணுவத் தலைவர் உட்பட 8 பேர் பலி!

    அசாமில் வெடித்தது கலவரம் – 2 பேர் பலி; 58 போலீஸார் படுகாயம்

    பொங்கலுக்கு ரூ.5,000?. அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!. அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»அதிமுக 170, பாஜக 23, பாமக 23… கசிந்தது தொகுதி பங்கீடு
    தேர்தல் 2026

    அதிமுக 170, பாஜக 23, பாமக 23… கசிந்தது தொகுதி பங்கீடு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 24, 2025Updated:December 24, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    admk alliance
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக 170, பாஜக 23, பாமக 23, தேமு​திக 6, அமமுக 6, ஓபிஎஸ் 3, தமா​கா-வுக்கு 3 இடங்​கள் என அதி​முக வியூக வகுப்​பாளர்​கள் வெளி​யிட்ட தகவலால் பரபரப்பு ஏற்​பட்​டது.

    தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி அனைத்து கட்​சிகளும் கூட்​டணி பேச்​சு​வார்த்​தை, தொகுதி பங்​கீடு, பிரச்​சா​ரம், பொதுக்​கூட்​டம் உள்​ளிட்ட பணி​களில் தீவிர கவனம் செலுத்தி வரு​கிறது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணியை பொருத்​தவரை அதி​முக​விடம் இருந்து 40 தொகு​தி​களை பெற்று விட வேண்​டும் என பாஜக ஆரம்​பம் முதலே திட்​ட​மிட்டு வந்​தது.

    அதே​நேரத்​தில், அதி​முகவோ, 20 முதல் 25 தொகு​தி​களை மட்​டுமே பாஜக​வுக்கு ஒதுக்​கு​வோம் என தெரி​வித்து வந்​தது. இந்​நிலை​யில், பாஜக தேர்​தல் பொறுப்​பாளர்​களான மத்​திய அமைச்​சர்​கள் பியூஷ் கோயல், அர்​ஜுன் ராம் மேக்​வால் நேற்று சென்னை வந்​தனர். எம்​.ஆர்​.சி.நகரில் உள்ள நட்​சத்​திர ஹோட்​டலில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யுடன் ஆலோ​சனை நடத்​தினர்.

    இந்த ஆலோ​சனை கூட்​டத்​தில், பாஜக தரப்​பில் பியூஷ் கோயல், அர்​ஜுன் ராம் மேக்​வால், மேலிட பொறுப்​பாளர்​கள் சுதாகர் ரெட்​டி, அரவிந்த் மேனன், மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​க​னும், அதி​முக சார்​பில், பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, முன்​னாள் அமைச்​சர்​கள் எஸ்​.பி.வேலுமணி, திண்​டுக்​கல் சீனி​வாசன், கே.பி.​முனு​சாமி, தங்​கமணி உள்​ளிடோரும் பங்​கேற்​ற​னர்.

    இதில், தமிழக அரசி​யல் கள நில​வரம், கூட்​டணி கட்​சிகள் ஒருங்​கிணைப்​பு, ஓபிஎஸ், டிடிவி தினகரன் விவ​காரம், தொகுதி பங்​கீடு குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது. கூட்​ட​ணி​யில் இடம் பெறும் கட்​சிகள் எவ்​வாறு ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும் என்​பது குறித்​தும் ஆலோ​சனை நடத்​தினர். இந்​நிலை​யில், அதி​முக 170 தொகு​தி​களில் போட்​டி​யிட பாஜக​விடம் விருப்பம் தெரி​வித்​துள்​ள​தாக, அதி​முக வியூக வகுப்​பாளர்​கள் தரப்​பில் சில தகவல்​கள் நேற்று பரப்​பப்​பட்டு பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

    அதாவது, தமி​ழ​கத்​தில் பாஜக போட்​டி​யிடும் தொகு​தி​களின் பட்​டியலை பழனி​சாமி​யிடம், பியூஷ் கோயல் வழங்​கி​னார். அப்​போது, தமி​ழ​கத்​தில் 40 தொகு​தி​களில் பாஜக போட்​டி​யிட விரும்​புவ​தாக அவர் பழனி​சாமி​யிடம் தெரி​வித்​துள்​ளார். ஆனால், பாஜக கொடுத்த பட்​டியலை பழனி​சாமி வாங்​க​வில்​லை. மாறாக, அவர் ஒரு பட்​டியலை தயார் செய்​து, பியூஷ் கோயலிடம் வழங்​கி​னார். அதில், தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் போட்​டி​யிடும் ஒவ்​வொரு கட்​சிக்​கும் ஒதுக்​கப்​படும் தொகு​தி​கள் எண்​ணிக்கை குறித்த விவரம் இருந்​தது.

    அந்​தவகை​யில், அதி​முக 170, பாஜக 23, பாமக 23, தேமு​திக 6, அமமுக 6, ஓபிஎஸ் 3, ஜி.கே.​வாசன் தரப்பு 3 என தொகு​தி​கள் பிரிக்​கப்​பட்டு பட்​டியல் வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த பட்​டியல் எப்​படி தயார் செய்​யப்​பட்​டது என்​பதை விளக்​கும் வகை​யில், கடந்த 4 தேர்​தல்​களில் ஒவ்​வொரு தொகு​தி​களி​லும், அந்​தந்த கட்​சிகள் பெற்ற வாக்​கு​கள் சதவீதம் தொடர்​பான விவரங்​களை​யும் பாஜக​விடம் பழனி​சாமி வழங்​கி​னார்.

    பாமக, தேமு​திக, ஜி.கே.​வாசன் தரப்​புக்கு தேவை​யான தொகு​தி​களை வழங்கி அவர்​களை அதி​முக ஒருங்​கிணைக்​கும். ஓபிஎஸ், டிடிவி தினகரன் தரப்பை பாஜக ஒருங்​கிணைத்​துக் கொள்​ளட்​டும் என பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். அதே​நேரம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் அதி​முக தலை​மையை ஏற்க வேண்​டும், முதல்​வர் வேட்​பாளர் தொடர்​பாக அவர்​கள் இரு​வ​ரும் எந்த கருத்​தும் தெரிவிக்க கூடாது என்​றும் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார்.

    ஜனவரி 15-ம் தேதிக்கு பிறகு: மேலும், ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்​ட​ணி​யில் சேர்ப்​பது குறித்து தற்​போது எந்த அறி​விப்​பும் வெளி​யிட வேண்​டாம். ஜனவரி 15-ம் தேதிக்கு பிறகு மெகா கூட்​டணி அறி​விப்பை வெளி​யிடும் போது பார்த்​துக் கொள்​வோம். கூட்​ட​ணி, தொகுதி பங்​கீடு தொடர்​பாக எந்த பேச்​சு​வார்த்​தை​யிலும் அண்​ணா​மலை இடம் பெறக்​கூ​டாது என பழனி​சாமி திட்​ட​வட்​ட​மாக கூறி​யுள்​ளார். மேலும், பாமக​வில் தற்​போது தந்​தை, மகன் பிரச்​சினை நிலவி வரு​கிறது. எனவே, ராம​தாஸ் மற்​றும் அன்​புமணிக்கு தனித்​தனி​யாகவோ, அல்​லது இரு தரப்​பை​யும் இணைத்தோ 23 இடங்​களை ஒதுக்​கு​வதை அதி​முக பார்த்​துக் கொள்​ளும் என கூட்​டத்​தில் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். பழனி​சாமி கொடுத்த பட்​டியலை பெற்​றுக் கொண்ட பாஜக, அந்த பட்​டியல் தொடர்​பாக மேலிடத்​தில் ஆலோ​சனை நடத்​திய பிறகு, அடுத்​தக்​கட்ட தொகுதி பங்​கீடு பேச்​சு​வார்த்​தை​யின் போது தொகு​தி​களை இறுதி செய்து கொள்​ளலாம் என தெரி​வித்​துள்​ள​தாக​வும், அடுத்த வாரம் இரண்​டாம் கட்ட பேச்சு வார்த்தை நடை​பெறும் என்​றும் அதி​முக வியூக வகுப்​பாளர்​கள் தரப்​பில் இருந்து தகவல்​கள் வெளி​யாகி உள்​ளது.

    ஆனாலும், ஆலோ​சனை கூட்​டத்தை முடித்​து​விட்டு வெளியே வந்த பியூஸ் கோயல், பழனி​சாமி, நயி​னார் நாகேந்​திரன் உள்​ளிட்ட யாரும், தொகுதி பங்​கீடு தொடர்​பான எந்த தகவலை​யும் தெரிவிக்​க​வில்லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிரைவில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம்! தேர்தலுக்கு தயாராகும் இபிஎஸ்
    Next Article பாஜகவினர் விஜய் குறித்து விமர்சிக்க வேண்டாம்!. பியூஸ் கோயல்!.
    Editor TN Talks

    Related Posts

    அதிமுகவில் விருப்ப மனுக்கள் தாக்கல் நிறைவு! 10,000-க்கும் மேற்பட்டோர் மனு

    December 24, 2025

    குழப்பத்தில் முடிந்த அதிமுக-பாஜக மீட்டிங்! ஓ.பி.எஸ் வைத்த பெரிய டிவிஸ்ட்..!

    December 24, 2025

    ‘ஸ்ரீவைகுண்டத்தில் போட்டி’ – சமகக தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிவிப்பு

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    துருக்கியில் பெரும் விமான விபத்து!. லிபிய இராணுவத் தலைவர் உட்பட 8 பேர் பலி!

    அசாமில் வெடித்தது கலவரம் – 2 பேர் பலி; 58 போலீஸார் படுகாயம்

    பொங்கலுக்கு ரூ.5,000?. அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!. அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

    பெரியாரின் சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுப்போம்!. விஜய் ட்வீட்!

    அதிவேக தனிநபர் ஸ்கோர்!. ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!.

    Trending Posts

    விரைவில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம்! தேர்தலுக்கு தயாராகும் இபிஎஸ்

    December 24, 2025

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    மகாத்மா பெயர் நீக்கம்!. தமிழகம் முழுவதும் 400 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!.

    December 24, 2025

    கிறிஸ்துமஸ் விழா: வைகோ வாழ்த்து

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.