சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக 170, பாஜக 23, பாமக 23, தேமு​திக 6, அமமுக 6, ஓபிஎஸ் 3, தமா​கா-வுக்கு 3 இடங்​கள் என அதி​முக வியூக வகுப்​பாளர்​கள் வெளி​யிட்ட தகவலால் பரபரப்பு ஏற்​பட்​டது.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி அனைத்து கட்​சிகளும் கூட்​டணி பேச்​சு​வார்த்​தை, தொகுதி பங்​கீடு, பிரச்​சா​ரம், பொதுக்​கூட்​டம் உள்​ளிட்ட பணி​களில் தீவிர கவனம் செலுத்தி வரு​கிறது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணியை பொருத்​தவரை அதி​முக​விடம் இருந்து 40 தொகு​தி​களை பெற்று விட வேண்​டும் என பாஜக ஆரம்​பம் முதலே திட்​ட​மிட்டு வந்​தது.

அதே​நேரத்​தில், அதி​முகவோ, 20 முதல் 25 தொகு​தி​களை மட்​டுமே பாஜக​வுக்கு ஒதுக்​கு​வோம் என தெரி​வித்து வந்​தது. இந்​நிலை​யில், பாஜக தேர்​தல் பொறுப்​பாளர்​களான மத்​திய அமைச்​சர்​கள் பியூஷ் கோயல், அர்​ஜுன் ராம் மேக்​வால் நேற்று சென்னை வந்​தனர். எம்​.ஆர்​.சி.நகரில் உள்ள நட்​சத்​திர ஹோட்​டலில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யுடன் ஆலோ​சனை நடத்​தினர்.

இந்த ஆலோ​சனை கூட்​டத்​தில், பாஜக தரப்​பில் பியூஷ் கோயல், அர்​ஜுன் ராம் மேக்​வால், மேலிட பொறுப்​பாளர்​கள் சுதாகர் ரெட்​டி, அரவிந்த் மேனன், மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​க​னும், அதி​முக சார்​பில், பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, முன்​னாள் அமைச்​சர்​கள் எஸ்​.பி.வேலுமணி, திண்​டுக்​கல் சீனி​வாசன், கே.பி.​முனு​சாமி, தங்​கமணி உள்​ளிடோரும் பங்​கேற்​ற​னர்.

இதில், தமிழக அரசி​யல் கள நில​வரம், கூட்​டணி கட்​சிகள் ஒருங்​கிணைப்​பு, ஓபிஎஸ், டிடிவி தினகரன் விவ​காரம், தொகுதி பங்​கீடு குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது. கூட்​ட​ணி​யில் இடம் பெறும் கட்​சிகள் எவ்​வாறு ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும் என்​பது குறித்​தும் ஆலோ​சனை நடத்​தினர். இந்​நிலை​யில், அதி​முக 170 தொகு​தி​களில் போட்​டி​யிட பாஜக​விடம் விருப்பம் தெரி​வித்​துள்​ள​தாக, அதி​முக வியூக வகுப்​பாளர்​கள் தரப்​பில் சில தகவல்​கள் நேற்று பரப்​பப்​பட்டு பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

அதாவது, தமி​ழ​கத்​தில் பாஜக போட்​டி​யிடும் தொகு​தி​களின் பட்​டியலை பழனி​சாமி​யிடம், பியூஷ் கோயல் வழங்​கி​னார். அப்​போது, தமி​ழ​கத்​தில் 40 தொகு​தி​களில் பாஜக போட்​டி​யிட விரும்​புவ​தாக அவர் பழனி​சாமி​யிடம் தெரி​வித்​துள்​ளார். ஆனால், பாஜக கொடுத்த பட்​டியலை பழனி​சாமி வாங்​க​வில்​லை. மாறாக, அவர் ஒரு பட்​டியலை தயார் செய்​து, பியூஷ் கோயலிடம் வழங்​கி​னார். அதில், தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் போட்​டி​யிடும் ஒவ்​வொரு கட்​சிக்​கும் ஒதுக்​கப்​படும் தொகு​தி​கள் எண்​ணிக்கை குறித்த விவரம் இருந்​தது.

அந்​தவகை​யில், அதி​முக 170, பாஜக 23, பாமக 23, தேமு​திக 6, அமமுக 6, ஓபிஎஸ் 3, ஜி.கே.​வாசன் தரப்பு 3 என தொகு​தி​கள் பிரிக்​கப்​பட்டு பட்​டியல் வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த பட்​டியல் எப்​படி தயார் செய்​யப்​பட்​டது என்​பதை விளக்​கும் வகை​யில், கடந்த 4 தேர்​தல்​களில் ஒவ்​வொரு தொகு​தி​களி​லும், அந்​தந்த கட்​சிகள் பெற்ற வாக்​கு​கள் சதவீதம் தொடர்​பான விவரங்​களை​யும் பாஜக​விடம் பழனி​சாமி வழங்​கி​னார்.

பாமக, தேமு​திக, ஜி.கே.​வாசன் தரப்​புக்கு தேவை​யான தொகு​தி​களை வழங்கி அவர்​களை அதி​முக ஒருங்​கிணைக்​கும். ஓபிஎஸ், டிடிவி தினகரன் தரப்பை பாஜக ஒருங்​கிணைத்​துக் கொள்​ளட்​டும் என பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். அதே​நேரம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் அதி​முக தலை​மையை ஏற்க வேண்​டும், முதல்​வர் வேட்​பாளர் தொடர்​பாக அவர்​கள் இரு​வ​ரும் எந்த கருத்​தும் தெரிவிக்க கூடாது என்​றும் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார்.

ஆனாலும், ஆலோ​சனை கூட்​டத்தை முடித்​து​விட்டு வெளியே வந்த பியூஸ் கோயல், பழனி​சாமி, நயி​னார் நாகேந்​திரன் உள்​ளிட்ட யாரும், தொகுதி பங்​கீடு தொடர்​பான எந்த தகவலை​யும் தெரிவிக்​க​வில்லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version