Close Menu
    What's Hot

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»தென் மாவட்டத்தில் தொகுதி வேண்டும்… கூட்டணிக்கு ஜான் பாண்டியன் நிபந்தனை
    தேர்தல் 2026

    தென் மாவட்டத்தில் தொகுதி வேண்டும்… கூட்டணிக்கு ஜான் பாண்டியன் நிபந்தனை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    john
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென் மாவட்டத்தில் போட்டியிடும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது.

    வரும் 2026 தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி ஏற்படலாம் எனச் சொல்லப்படும் நிலையில், சீமான் கட்சியைத் தவிர மற்ற மூன்று கூட்டணிகளும் தங்களைப் பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளன.

    திமுக தலைவர் ஸ்டாலினும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியும் அரசு நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்புகள் மூலமாக தேர்தலுக்கான முதல்கட்டப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள். தவெக தலைவர் விஜய்யும் மக்கள் சந்திப்புக் கூட்டங்களைத் தொடர ஆரம்பித்திருக்கிறார். அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக-வும் அதன் தலைவர் நயினார் நாகேந்திரனின் யாத்திரைப் பயணத்தை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில், என்டிஏ கூட்டணியில் இருக்கும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தென் மாவட்டத்தில் போட்டியிடும் திட்டத்தில் உள்ளது. இது குறித்து, நம்மிடம் பேசிய அக்கட்சியின் நிர்வாகிகள், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் நீடிக்கிறோம். எங்கள் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு முடிந்துவிட்டது. இனி, சிறப்பு செயற்குழுக் கூட்டம் தான் நடக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எங்களுக்கு ஓர் அங்கீகாரம் தருவார்கள் என்று நம்புகிறோம். அப்படிக் கிடைக்கும் பட்சத்தில் தென் மாவட்டத்தில் போட்டியிட விரும்புகிறோம்.

    தென்காசி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், வில்லிபுத்தூர் உள்ளிட்ட தேவேந்திரகுல வேளாளர் மக்கள் அதிகமுள்ள தொகுதிகளில் நாங்கள் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம். ஜனவரி தொடக்கம் முதல், சட்டப்பேரவை தொகுதி வாரியாக பொதுக்கூட்டங்களையும் நடத்த இருக்கிறோம். அதன்படி பரமக்குடி, தென்காசி, சங்கரன்கோவில், ஓட்டப்பிடாரம், மானாமதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் அந்தக் கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். இதில் எங்கள் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்.

    தேவேந்திரகுல வேளாளர் மக்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய 2 கோரிக்கைகளை மையப்படுத்தி இந்தக் கூட்டங்களை நடத்த இருக்கிறோம்” என்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொங்கல் பரிசு தொகுப்போடு ரூ.5,000 ரொக்கம்: இபிஎஸ் வலியுறுத்தல்
    Next Article இன்றைய நாள் எப்படி? துல்லிய கணிப்பு
    Editor TN Talks

    Related Posts

    மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    February 13, 2026

    யாரும் பனையூருக்கு விருப்ப மனு வாங்க வராதீங்க..! தவெக பொதுச்செயலாளர் ஆனந்தின் அறிவிப்பால் நிர்வாகிகள் அதிர்ச்சி..!

    February 7, 2026

    “2026-ல் தர்மம் வெல்லும்; 26 தொகுதிகளில் பா.ம.க வெற்றி நிச்சயம்!” -பா.ம.க செயல் தலைவர் ப.ஸ்ரீகாந்தி

    January 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    Trending Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    February 15, 2026

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    February 15, 2026

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    February 15, 2026

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.