சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் விஜய் இன்று (மார்ச் 30) வேட்புமனு தாக்கல் செய்தார்.

வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பு மனு தாக்கல் தொடங்கியிருக்கும் நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்க வேட்புமனு தாக்கல் செய்ய வியாசர்பாடியில் உள்ள தேர்தல் அலுவலகத்துக்கு வந்தார் தவெக தலைவர் விஜய்.

அங்கு தேர்தல் அலுவலர் கீதாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

ஒரு பக்கம் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட செம்பியம் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அதே நேரத்தில் வியாசர்பாடியில் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அங்கிருந்து பெரம்பூரில் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்க்கு, அவரது ஆதரவாளர்கள் வழிநெடுக வாழ்த்து தெரிவித்து ஆரவாரம் செய்தனர். வியாசர்பாடி பகுதியில் திரண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தனது வழக்கமான பஸ்-ஐ தவிர்த்து, சிறிய வேனில் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். பெரம்பூர் பகுதியில் குறுகிய சாலைகள் என்பதால் தனது பிரசார வியூகத்தில் விஜய் இந்த மாற்றத்தை செய்துள்ளதாக கூறப்படுகிறது

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version