நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) இணைவதற்கு டி.டி.வி. தினகரனின் அமமுகவும் ஓ. பன்னீர்செல்வமும் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு தலைவர்களுக்கும் – விஜய்க்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன என்றும், விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அரசியல் ஒப்பந்தம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெக வட்டாரங்களின்படி, கடந்த சில வாரங்களாக இந்த பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடந்தன. இதில் தொகுதிப் பங்கீடு, மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு, தேர்தலை முன்னிட்டு ஒரு வலுவான கூட்டணியை அமைப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டது.
தரைமட்ட அளவில் செல்வாக்கு வளர்த்து வரும் TVK-விற்கு, தினகரன், பன்னீர்செல்வம் போன்ற தலைவர்களின் அனுபவமும் ஆதரவும் பெரும் பயனளிக்கும். கூட்டணி இறுதியானது முன்னாள் அ.தி.மு.க தலைவர்களான தினகரனும் பன்னீர்செல்வமும், மாநிலத்தின் வேகமாக மாறிவரும் அரசியல் களத்தில் தங்களின் முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக்கொள்ள புதிய கூட்டணிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
விஜய்யுடன் இணைவது, அவர்களுக்கு இளைஞர்கள் இடையே வரவேற்பை கொடுக்கும். இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் இல்லை. எனினும், அரசியல் விமர்சகர்கள் விரைவில் அறிவிப்பு வரலாம் எனக் கருதுகின்றனர். இந்தக் கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டால் அது வலுவான மூன்றாவது அணிக்கான தொடக்கமாக இருக்கும். ஏற்கனவே தவெக உடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் விஜயுடன் போனில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் பிடி கொடுக்காமல் இருந்த விஜய் பின்னர் ஓ பன்னீர்செல்வம் உடன் போனில் நீண்ட நேரம் பேசியதாக கூறப்படுகிறது.
டிடிவி தினகரனைப் போலவே, ஓ. பன்னீர்செல்வம் தரப்பும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவின் எடப்பாடி கே. பழனிசாமியை ஏற்காது என அறிவித்துள்ளது. ஓபிஎஸ் இரண்டு ஆப்ஷன் சமீபத்தில் சென்னை வேப்பேரியில் நடைபெற்ற ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான மாவட்ட செயலாளர் கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர் என மாவட்ட செயலாளர்களிடம் ஓ பன்னீர்செல்வம் சார்பாக கருத்து கேட்கப்பட்டது. இதில் இரண்டு ஆப்ஷன் கொடுத்து கருத்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றத் தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் (AIADMTUMK) நிர்வாகிகள் உடன் நேற்று ஓ பன்னீர்செல்வம் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன. அதன்படி அதிமுகவில் மீண்டும் இணையலாமா?அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா? அல்லது தவெக உடன் கூட்டணி வைக்கலாமா? திமுக உடன் கூட்டணி வைக்கலாமா? என்று ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதில் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக உடன் இனி இணைய வேண்டாம்.. அவர் இறங்கி வருவது போல தெரியவில்லை. இனி அதிமுக உடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை .. இபிஎஸ் உடன் இனி இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
விஜய் உடன் கூட்டணி உறுதி இன்னொரு பக்கம் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர் என மாவட்ட செயலாளர்களிடம் ஓ பன்னீர்செல்வம் சார்பாக கருத்து கேட்கப்பட்டது. இதில் இரண்டு ஆப்ஷன் கொடுத்து கருத்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. Option a தவெக Option b திமுக என்று இரண்டு ஆப்ஷன் கொடுத்து கேள்வி கேட்கப்பட்டது. இரு ஆப்ஷன்களை கொடுத்து மாவட்ட செயலாளர்களின் கருத்துக்கள் பெறப்பட்டது.
இதில் பெரும்பாலான நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி வைக்கவே அதிகளவில் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்தே ஓ பன்னீர்செல்வம் விஜய் உடன் கூட்டணி வைக்க முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக விஜயுடன் ஆலோசனைகள் நடந்து உள்ளன.
இந்த ஆலோசனையின் முடிவில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) இணைவதற்கு டி.டி.வி. தினகரனின் அமமுகவும் ஓ. பன்னீர்செல்வமும் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இரு தலைவர்களுக்கும் – விஜய்க்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
