2026ம் ஆண்டு நடக்க தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று (டிச.28) முதல் மீண்டும் விருப்ப மனுக்கள் அளிக்கப்படுகின்றன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இதற்காக வெளியே பிரத்யேக பந்தல் போடப்பட்டு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்படுகின்றன. மனுக்களை பூர்த்தி செய்து, திரும்பி அளிக்கவும் இட வசதி செய்து தரப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான விருப்ப மனு வினியோகத்தை கடந்த 15ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து கடந்த 23ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் அதிமுகவில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசத்தை இன்று (டிச.28) முதல் 31ம் தேதி வரை நீட்டித்து, எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

