தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் தங்களது ஜனநாயக கடமையை பதிவு செய்து வருகின்றனர், 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், 75,064 வாக்குச்சாவடிகளில் 5,73,43,291 பேர் வாக்களிக்க உள்ளனர்.
பூத் ஸ்லிப் மற்றும் அடையாள அட்டை அவசியம் எடுத்துச் செல்லவும். வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது. வாக்களிப்பதை போட்டோவோ, வீடியோவோ எடுக்கக் கூடாது. வெயில் காரணமாக குடை, தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லவும்.
முன்னதாக, TN முழுவதும் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ரேண்டம் முறையில் 10 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு EVM இயந்திரம் முறையாக வேலை செய்கிறதா என்ற சோதனையானது நடைபெற்றது. பின்னர், அந்த வாக்குகள் அழிக்கப்பட்டு மக்கள் வாக்களிக்க EVM தயார் செய்யப்பட்டது.
இதுவரை நடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள்:
தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வாக்குப்பதிவு வரலாற்றை பார்க்கலாம். 2006 – 70.8% (மொத்தமாக பதிவான வாக்குகள் 3,30,45,949).
2011 – 78.2% (3,68,42,687).
2016 – 73.6% (4,26,46,591).
2021 – 76.6% (4,58,86,784). தமிழகத்தில் தற்போது SIR பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் வாக்குப்பதிவு சதவீதம் 80% தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 5.73 கோடி. (ஆண்கள் – 2.81 கோடி மற்றும் பெண்கள் – 2.93 கோடி) , களத்தில் இருப்பது 4,023 வேட்பாளர்கள். (ஆண்கள் – 3,579 மற்றும் பெண்கள் – 443), மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75 ஆயிரம். தேர்தல் பணிகளில் 3.60 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். *பாதுகாப்பு பணிகளில் 300 கம்பெனி துணை ராணுவத்தினர், 1.20 லட்சம் தமிழக போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
