கலைவாணர் அரங்கில் இன்று மாலை நடக்கிறது ,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் சிறப்பு விருதுகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா இன்று மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையேற்று விருதுகள் வழங்கி, மலர் வெளியீட்டு விழாப் பேருரையாற்றுகிறார்.
தமிழ் வளர்ச்சித் மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வரவேற்புரையாற்றுகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் உறுப்பினர், செயலாளர் விஜயா தயாளன் ஆகியோர் முன்னணி வகிக்கின்றனர்.
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் நன்றி கூறுகிறார்.
இவ்விழாவில், 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதும், சிறப்பு விருதுகளாக
பாரதியார் விருது (இயல்) முனைவர் ந.முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது (இசை) பத்மபூஷன் டாக்டர் கே.ஜே.யேசுதாஸுக்கும், பாலசரசுவதி விருது (நாட்டியம்) பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாளுக்கும் வழங்கப்படகிறது.
இந்நிகழ்வில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். மாலை 4 மணிக்கு ” உருபாணர்” இசைக் குழுவினரின் யாழ் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.