அமெரிக்காவின் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மருந்து விலை குறித்து அமெரிக்கப் பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது நாட்டில் 1,000 டாலருக்கு (சுமார் ரூ.86,000) விற்கப்படும் மருந்தை, இந்தியாவிலிருந்து வெறும் 25 டாலருக்கு (சுமார் ரூ.2,150) வாங்கியதாக அவர்  தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/reel/DZYgShBBKIP/? 

அந்த அமெரிக்கப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், அமெரிக்காவில் 6 மாத்திரைகள் கொண்ட ஒரு பெட்டி மருந்துக்கு சுமார் 86,000 ரூபாய் செலுத்த வேண்டியிருந்ததாகக் கூறியுள்ளார். ஆனால், அதே மருந்தை இந்தியாவிலிருந்து ஆர்டர் செய்தபோது, ஷிப்பிங் கட்டணம் உட்பட வெறும் 2,150 ரூபாய் மட்டுமே செலவானதாகக் குறிப்பிட்டுள்ளார். மருந்தின் விலை 10 டாலர் என்றும், ஷிப்பிங் கட்டணம் 15 டாலர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த மருத்துவக் கட்டமைப்பு ஒரு “ஜோக்” என்றும், இது ஒரு “ஊழல்”  என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். “நான் வாங்கிய அதே மருந்து என் நாட்டில் இருந்த விலையை விட 40 மடங்கு குறைவான விலைக்கு இந்தியாவில் கிடைத்துள்ளது” என்று அவர் ஆச்சரியத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version