தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

கடந்த ஆண்டு 60,000 ரூபாய்க்கும் கீழ் விற்பனையான தங்கம் தற்போது ராக்கெட் வேகத்தில் உயர்ந்து 80,000 ரூபாயை கடந்துள்ளது. கடந்த 9 மாதங்களாக விலை உயர்ந்து வரும் தங்கம் தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

வாரத்தின் முதல் நாளான நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.10,430க்கு விற்பனையானது. சரவனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.83,440 ஆக உயர்ந்திருந்தது. இதனை தொடர்ந்து இன்றும் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது.

இன்று காலை தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 10,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 84 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. இதேபோல் தங்கத்தின் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வந்தால் விரைவில் ஒரு லட்சத்தை எட்டும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version