சீனாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. மேலும் 20-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version