திருச்சியில் ஜஜி பங்களா எதிரே காதலியை கொலை செய்ய முயன்ற காதலனின் கொடூர செயல் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் சாலக்குடி பகுதியை சேர்ந்தவர் அமலா வெர்ஜினா. முத்து விஜயாபுரத்தை சேர்ந்த வியாகுல நவீன் இருவரும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தூய வளனார், மற்றும் புனித சிலுவை கல்லூரியில் பயின்று வந்துள்ளனர். இருவரும் பேருந்தில் செல்லும் போது நட்பு காதலாக மாறியுள்ளது.
கடந்த 3 வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். படிப்பை முடித்த பிறகு அமலா வெர்ஜினா, ஒமேகா நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். சமீப காலமாக வியாகுல நவீனை சந்திப்பதில் அமலா மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் ஐஜி பங்களா எதிரே உள்ள பூக்காவில் இருவரும் அமர்ந்து பேசும் போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நவீன் அமலா வெர்ஜினாவை அவர் அணிந்து வந்த துப்பட்டாவை பிடித்து கழுத்தை நெரித்து உள்ளார்.
மயக்கம் அடைந்த அமலா கீழே விழ, மீண்டும் அவருக்கு உயிர் இருக்கிறதா? என்று பார்த்த நவீன், அருகில் இருந்த கல்லை எடுத்து அவர் தலையிலும், முகத்திலும் கொடூரமாக தாக்க துவங்கியுள்ளார்.
அப்பகுதியில் சென்ற பொது மக்கள் உடனடியாக அவரை பிடிக்க முற்பட்டுள்ளனர். இதில் அவன் தப்பித்து ஓட முயன்றதால், பொதுமக்கள் சத்தம் போடவே, அருகில் ஐஜி பங்களாவில் காவல் பணியில் இருந்த காவல்துறையினரும் ஓடி வந்து நவீனை சுற்றி வளைத்து பிடித்தனர்.
நவீனை சரமாரியாக தாக்கிய மக்கள், அவரை உடனடியாக காவல்துறையினர் அவர் மீட்டு கேகே நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அமலாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தற்பொழுது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நவீன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் காதலித்த பெண்ணை காதலன் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதிதாக பொறுப்பேற்ற விஜய் அரசு தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்று கூறி, சிங்கப்படை அமைப்பதாக தனது முதல் கையெழுத்தாக போட்டிருந்தார். ஆனால் பட்டப்பகலில் ஐஜி பங்களா எதிரே இப்படி ஒரு சம்பவம் நடந்தது, சிங்கப்படை என்ன செய்துக் கொண்டிருக்கிறது என்ற கேள்வியை ஏழுப்பியுள்ளது.

