ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஐந்து நாடுகளுக்கான அரசு முறைப் பயணத்தின்கீழ் ஐக்கிய அரபு அமீரகத்தைத் தொடர்ந்து நெதர்லாந்து சென்ற பிரதமர் மோடி, பின்னர் ஸ்வீடன் சென்றார். கோதன்பர்க் நகர விமானநிலையத்தில் ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிரிஸ்டர்ஸன் பிரதமர் மோடியை நேரில் வரவேற்றார். இந்திய வம்சாவளியினரின் உற்சாக வரவேற்பையும் பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.

ஸ்வீடன் பயணத்தின் போது, அந்நாட்டு பிரதமர் உல்ஃப் கிரிஸ்டர்ஸன் உடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மேலும் பிற ஐரோப்பிய தலைவர்களையும் ஸ்வீடன் தலைமை செயல் அதிகாரிகளையும் சந்திக்கும் பிரதமர் மோடி, வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படவும், தொழில்நுட்ப ஒத்துழைப்பை செயல்படுத்துவது பற்றியும் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இதனிடையே பிரதமர் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய, “ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ்” என்ற சிறப்பு மிக்க விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. உலகளவில் பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 31வது மிகப் பெரிய கவுரவம் இதுவாகும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version