திருவாரூரில் திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் ஆ.ராசா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில், திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழாவில் பேசிய ஆ.ராசா, தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய நிலையை விமர்சித்தார். “ஒரு காலத்தில் பேரறிஞர் அண்ணா மற்றும் ராஜாஜி போன்ற தலைசிறந்த அரசியல் ஆளுமைகள் இருந்த சட்டமன்றத்தில், இன்று நாதாரி முதல்வரின் ஆட்சி நடைபெற்று வருகிறது” என்று குறிப்பிட்டார்.

மு.க.ஸ்டாலினைச் சுட்டிக்காட்டி, ஒரு தேர்தலை வைத்து எடைபோடுவீர்களா என கேள்வி எழுப்பினார்.

மேலும், திமுக கூட்டணி தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திமுக கூட்டணியே இல்லை என்கிறார். திமுக கூட்டணியில் நீங்கள் இல்லை என்று கூற உங்களுக்கு உரிமை உள்ளது. கூட்டணியே இல்லைன்னு சொல்றதுக்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு. எதுக்கு இந்த அதிகப் பிரசங்கித்தனம்? கூட்டணியில் 60-க்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கு. அவர்கள் தினமும் மு.க.ஸ்டால்னிஅ சந்தித்துச் செல்வதாகக் குறிப்பிட்டார்.

கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதை  பொதுக்குழு கூட்டி முடிவு செய்வதாக வைகோ கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி  இவர் போனால் அப்படியே ஒரு லட்சம் பேர் திரண்டு விடுவார்கள் என எள்ளி நகையாடினார்.

அத்துடன், “இனி யாருடனும் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் அறிவிக்க வேண்டும்” என்றும் ஆ.ராசா வலியுறுத்தினார்.

ஆ.ராசாவின் இந்த கருத்துகள் திமுக கூட்டணி அரசியலில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக இடதுசாரி கட்சிகளுடனான உறவு மற்றும் எதிர்கால கூட்டணி நிலைப்பாடு குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version