பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தலைவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் ஆத்மியின் தலைவரான லக்கி ஓபராய், 8 மணியளவில் ஜலந்தரின் மாடர்ன் டவுனில் உள்ள குருத்வாராவில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்துள்ளார். தன்னுடைய ஜீப்பில் ஏறி அங்கிருந்து புறப்பட்ட போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 8 முதல் 10 முறை அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், ஜீப்பின் கண்ணாடி உடைந்து உள்ளே இருந்த லக்கி ஓபராய் மீது குண்டுகள் பாய்ந்தன.

இதனையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல, பலத்த காயமடைந்த ஓபராயை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் அமிர்தசரஸில் ஆம் ஆத்மி பஞ்சாயத்து தலைவர் ஜர்மல் சிங், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு ஆம் ஆத்மி தலைவர் கொல்லப்பட்ட நிகழ்வு அங்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பஞ்சாப்பில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version