Close Menu
    What's Hot

    பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் உள்பட 15 பேர் பலி!

    மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் திடீர் ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் கவனம் செலுத்தத் திட்டம்!

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 47 என்.டி.ஏ அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!
    Featured

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    Editor web3By Editor web3June 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Shed metro workers
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக இரும்பு ஷெட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வடமாநிலத் தொழிலாளர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    சென்னை ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிக்காக நூற்றுக்கணக்கான வடமாநில ஒப்பந்தத் தொழிலாளர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இரும்பு ஷெட்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு தொழிலாளர்கள் அனைவரும் அங்குள்ள ஒரு ஷெட்டில் அமர்ந்து, தொலைக்காட்சியில்  ஐபிஎல் இறுதிப் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த தற்காலிக குடியிருப்பின் இரும்பு மேற்கூரை பலத்த சப்தத்துடன் முற்றிலும் இடிந்து தொழிலாளர்கள் மீது கீழே விழுந்தது. இடிபாடுகளில் சிக்கித் தவித்த தொழிலாளர்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியினர் நந்தம்பாக்கம் போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களைப் பத்திரமாக மீட்டனர்.

    இந்த விபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!
    Next Article பயிர்க்கடன் தள்ளுபடியில் தவெக பச்சை துரோகம்!. திட்டமிட்டு ஏமாற்றும் வேலையா? தங்கம் தென்னரசு ட்வீட்!
    Editor web3
    • Website

    Related Posts

    மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் திடீர் ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் கவனம் செலுத்தத் திட்டம்!

    July 24, 2026

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 47 என்.டி.ஏ அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்?

    July 24, 2026

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் கணிப்பு

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் உள்பட 15 பேர் பலி!

    மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் திடீர் ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் கவனம் செலுத்தத் திட்டம்!

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 47 என்.டி.ஏ அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்?

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் கணிப்பு

    இணைய சேவை இல்லாமல் இயங்கும் ‘பிட்சாட்’ செயலிக்கு மத்திய அரசு தடை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.