தனது ரசிகர் மன்றத்தைச் சார்ந்த நிர்வாகிகள் ராஜசேகரன் மற்றும் தனசேகர் ஆகிய  இரண்டு பேரின் குழந்தைகளுக்கான  எம்பிபிஎஸ் மற்றும்  இன்ஜினியரிங் படிப்பிற்கான முழு கல்வி செலவையும்  நடிகர் தனுஷ் ஏற்றுக் கொண்டு உதவி செய்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகி ராஜசேகரனின்  மகள் ஹரிஷிதா  என்பவருக்கு அவரின் இன்ஜினியரிங் படிப்பிற்கான மொத்த செலவையும் ஏற்றார்.

அதேபோல வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகி தனசேகரின்  மகள் ஸ்வேதா அவர்களின் மருத்துவ கல்லூரி படிப்பிற்கான (எம்பிபிஎஸ்) முழு செலவையும் ஏற்று உதவியுள்ளார்.

ஓம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இவர்கள் இரண்டு பேரின் குடும்பத்தாரை வரவழைத்து கல்வி செலவிற்கான  காசோலையை தனுஷ் வழங்கியதோடு, இரண்டு குழந்தைகளையும் பாராட்டினர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version